Loading...
Muscat
      யாதும் ஊரே யாவரும் கேளிர் - புறநானூறு.
📅⏰
+968 24703263
             அன்புடையீர், வணக்கம்..!!!   நமது மஸ்கட் தமிழ்ச் சங்கமானது இந்தியன் சோசியல் கிளப் பொதுக்குழுவின் வழிகாட்டலின் கீழ் ஓமான் நாட்டின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு இயங்கி வருகின்றது.

நிகழ்ச்சி : ராணி மகாராணி - மகளிர் மட்டும்

பெண்களுக்காக பெண்களால் பிரத்யேகமாக, நவம்பர் 29 ஆம் தேதி நடந்து முடிந்த மஸ்கட் தமிழ்ச் சங்கத்தின் ”ராணி மகாராணி” நிகழ்ச்சி பலரின் பேரன்பையும் பெருமதிப்பையும் பெற்றதில் மஸ்கட் தமிழ்ச் சங்கம் பெருமிதம் கொள்கிறது.

நம் செயற்குழு உறுப்பினர் மற்றும் செயற்குழு உறுப்பினர்களின் இல்லத்தரசிகள் இணைந்து ஒருங்கிணைக்க, புகைப்படக்கலைஞர், கணினி உதவியாளர்கள்(IT Head ), தன்னார்வலர்கள் என அனைத்தும் பெண்களால் கையாளப்பட்ட நிகழ்ச்சி என்பதே இந்நிகழ்ச்சியின் தனிச்சிறப்பு என்றால் அது மிகையாகாது.

நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக டாக்டர்.திருமதி. சித்ரா நாராயண் அவர்களின் வருகை நிகழ்ச்சியை மேலும் சிறப்படையச் செய்தது. நிகழ்ச்சியின் இறுதி வரை எங்களோடு பயணித்து அவரின் அனுபவங்களை பகிர்ந்ததோடு மட்டுமல்லாமல் பெண்களை ஊக்குவிக்கும் விதமாக இருந்தது அவரின் பேச்சு. அவர்களுக்கு மீண்டும் ஒருமுறை மனமார்ந்த நன்றியை உரித்தாக்குகிறது மஸ்கட் தமிழ்ச் சங்கம்.

நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் நிகழ்ச்சியில் பங்கு கொண்டு” G Gold Jewellery” வழங்கிய வைர மோதிரங்கள் மற்றும் பல பரிசுகளைத் தட்டிச் சென்றுள்ளனர். போட்டியாளர்கள் அத்தனை பேரின் திறமைகளையும் ஒட்டு மொத்தமாக ஒரே இடத்தில் பார்க்கும்போது மட்டற்ற மகிழ்ச்சி!!!

ஏகப்பட்ட பரிசுகளை அள்ளிச் சென்ற தோழிகளைப் பார்த்து பிரம்மித்த பெண்களும் ஏராளம். அடடா திறமை இருந்தும் நாமும் பங்கு கொள்ளாமல் விட்டுவிட்டோமே என்று உச்சிக்கொட்டி சென்றவர்களும் உண்டு.

அறுசுவை மதிய உணவு மற்றும் தேநீர் விருந்து வழங்கிய ” மகாராஜாஸ் ” உணவகத்திற்கும் மற்றும் நல்லுள்ளம் கொண்ட அனுசரணையாளருக்கும் மஸ்கட் தமிழ்ச் சங்கத்தின் இதயம் கனிந்த நன்றிகள்.

மக்களுக்கான மேடையை அமைத்துக் கொடுத்து ஒவ்வொருவரின் திறமையையும் வெளிக்காட்டி, ஊக்குவித்து உயர்த்துவதில் மஸ்கட் தமிழ்ச் சங்கம் பேருவகை கொள்கிறது.

பெண்களுக்கான அந்த ஒருநாள், திருநாளானது!!! இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து மகாராணிகளுக்கும் மஸ்கட் தமிழ்ச் சங்கம் ஆத்மார்த்தமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது….🙏🏻🙏🏻

இடம் - College Of Banking And Finance Studies (CBFS), Bausher, Muscat தேதி : 29/நவம்பர்/2024, வெள்ளிக்கிழமை
நேரம் : காலை 10:00 மணி முதல்




நிகழ்ச்சி : குடும்ப கிரிக்கெட் நிகழ்ச்சி- 3.0

நமது மஸ்கட் தமிழ்ச் சங்கத்தின் நவம்பர் மாத நிகழ்ச்சி 08-November-2024 அன்று சிறப்பாக நடைபெற்றது என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்

நமது மஸ்கட் தமிழ்ச் சங்கத்தின் 16 குடும்ப அணியினர் கலந்து கொண்டு இந்தக் குடும்ப கிரிக்கெட் நிகழ்ச்சி Family Fun Cricket 3.0 ல் ஆர்வத்துடன் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து உற்சாகத்துடன் விளையாடி நிகழ்ச்சிகளை மிகச் சிறப்பாக அமைத்து கொடுத்த நமது சங்க உறுப்பினர்கள், அவர்தம் குடும்பத்தினர்களுக்கும் எங்களின் உளமார்ந்த நன்றிகள்…

இதில் கலந்து கொண்டு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் தங்களது சிறப்பான பங்களிப்பை அளித்தார்கள்.

இடம் - Scientific College of Design Stadium, Seeb தேதி : 08/நவம்பர்/2024, வெள்ளிக்கிழமை
நேரம் : மாலை 3:30 மணி




நிகழ்ச்சி :காற்றில் எந்தன் கீதம்- A Mega Musical Event-2024

நிகழ்ச்சி : உள் அரங்கு விளையாட்டுப் போட்டிகள்

2024 ஆம் ஆண்டின் செப்டம்பர் மாத நிகழ்ச்சியான, நமது மஸ்கட் தமிழ்ச்சங்கம் வழங்கிய உள்ளரங்க விளையாட்டுப் போட்டியில் 06-செப்டம்பர் -2024 அன்று நமது உறுப்பினர்கள் தங்களது குடும்பத்துடன் பெருந்திரளாய் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

கீழ்கண்ட விளையாட்டுகள் விமரிசையாக நடை பெற்றது .

  1. பல்லாங்குழி
  2. நொண்டியாட்டம்
  3. சதுரங்கம் (Chess)
  4. கரம் பலகை (Carom)
  5. பூப்பந்தாட்டம் (Badminton)
  6. ரூபிக்கின் கனசதுரம் (Rubik's cube)
  7. மேசைப்பந்தாட்டம் (Table Tennis)

நமது நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக திரு. காஷ்யப் பிரஜாபதி (சர்வதேச கிரிக்கெட் வீரர், ஓமன் கிரிக்கெட் அணி) அவர்கள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தார்.

இந்த விளையாட்டு போட்டியில் கலந்து கொண்ட உறுப்பினர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தவும், மேம்படுத்தவும் நல்ல ஒரு சிறந்த பயனுள்ள வாய்ப்பாக அமைந்தது.

நிகழ்ச்சியின் இறுதியில் போட்டியில் கலந்துகொண்டு சிறப்பித்த அனைவருக்கும் கோப்பை, பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கபட்டது.

இடம் - ISC Premises (Indian School Muscat), Darsait

தேதி : 06-செப்டம்பர் -2024 , வெள்ளிக்கிழமை
நேரம் : காலை 9:30 மணி முதல்

நிகழ்ச்சி : சுதந்திர தினம் 2024- கலாச்சார நடன நிகழ்ச்சி

2024 ஆம் ஆண்டின் ஆகஸ்ட் மாத நிகழ்ச்சியான , இந்திய சுதந்திர தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, இந்தியன் சோஷியல் கிளப், இந்தியாவின் பாரம்பரிய நடனங்களை வெளிப்படுத்தும் வகையில் கலாச்சார நடன நிகழ்ச்சியை நடத்தியது.

இடம் - Al Bustan Palace, Muscat தேதி : 15-ஆகஸ்ட் -2024, வெள்ளிக்கிழமை
நேரம் : மாலை 7 மணி




நிகழ்ச்சி : தமிழர் கலைவிழா 2024

2024 ஆம் ஆண்டின் நமது மஸ்கட் தமிழ்ச் சங்கத்தின் மே மாத நிகழ்ச்சி "தமிழர் கலைவிழா" மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது என்பதை அறிவிப்பதில் பெருமிதம் மற்றும் மிக்க மகிழ்ச்சி அடைகிறோம்.

உறுப்பினர்கள் தங்களது குடும்பத்துடன் கலந்து கொண்டு மகிழ்ந்தார்கள். நமது மஸ்கட் தமிழ்ச் சங்க உறுப்பினர்களின் பாரம்பரிய நடனம், நகைச்சுவை பட்டி மன்றம், இனிமையான பாடல்கள், பல வகையான விற்பனை அங்காடிகள்... என நாள் முழுவதுமே நிகழ்ச்சி அரங்கங்கள் கோலாகலமாக திகழ்ந்தது

மேலும் பம்பர் பரிசுகள், வியப்பூட்டும் சிறப்பு பரிசுத் தொகுப்புக்கள் மற்றும் ஏராளமான பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த தமிழர் கலைவிழா... வருகை தந்திருந்த அனைவருக்கும் மதிய நேர நேரத்தில் சைவ & அசைவ உணவும் மற்றும் மாலை நேரத்தில் சிற்றுண்டியும் வழங்கப்பட்டது..

இடம் - College Of Banking And Finance Studies (CBFS), Bausher, Muscat தேதி : 03-மே -2024, வெள்ளிக்கிழமை
நேரம் : காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை




நிகழ்ச்சி : நிஜமும் நிழலும் & ஊரும் உணவும்

2024 ஆம் ஆண்டின் நமது மஸ்கட் தமிழ்ச் சங்கத்தின் மார்ச் மாத நிகழ்ச்சி "நிஜமும் நிழலும் & ஊரும் உணவும்" நடைபெற்றது என்பதை அறிவிப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறோம்.

உறுப்பினர்கள் தங்களது குடும்பத்துடன் கலந்து கொண்டு மிக அழகாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மிகவும் ரசிக்கத்தக்க வகையில் பல விதமான காய்கறிகள், பழங்கள், பறவைகள், விலங்குகள், தமிழ் இலக்கிய கதாபாத்திரங்கள் வேடமிட்டு அதற்க்கு ஏற்றார்போல் பேசி பார்வையாளர்களை வெகுவாக சிறப்பித்தார்கள்.

இடம் - ISC Multi-purpose Hall, Darsait தேதி : 01-மார்ச்-2024, வெள்ளிக்கிழமை
நேரம் : மாலை 5:30 மணி




நிகழ்ச்சி : சித்திரம் பேசுதடி - குடும்ப வண்ணக்கோலப் போட்டி

2024 ஆம் ஆண்டின் நமது மஸ்கட் தமிழ்ச் சங்கத்தின் ஜனவரி மாத நிகழ்ச்சி "சித்திரம் பேசுதடி - குடும்ப வண்ண கோலப் போட்டி" வண்ணமயமாக நடைபெற்றது என்பதை அறிவிப்பதில் பெருமிதம் கொள்கிறோம்.

உறுப்பினர்கள் தங்களது குடும்பத்துடன் கலந்து கொண்டு தங்களது அழகான வண்ணமயமாக கோல படைப்புகளை வெளிப்படுத்தினார்கள் .

இடம் - ISC Multi-purpose Hall, Darsait தேதி : 26-ஜனவரி-2024, வெள்ளிக்கிழமை
நேரம் : மாலை 4:30 மணி




நிகழ்ச்சி : பிரமாண்டமான இன்னிசை நிகழ்ச்சி

நமது மஸ்கட் தமிழ்ச் சங்கத்தின் நவம்பர் மாத நிகழ்ச்சி 24-11-2023 அன்று மிக பிரமாண்டமாக "இன்னிசை நிகழ்ச்சி" நடைபெற்றது என்பதை அறிவிப்பதில் பெருமிதம் கொள்கிறோம்.

இடம் - City Amphitheater, Qurum தேதி : 24/ நவம்பர் /2023, வெள்ளிக்கிழமை
நேரம் : மாலை 5:30 மணி




நிகழ்ச்சி : குடும்ப கிரிக்கெட் நிகழ்ச்சி- 2.0

நமது மஸ்கட் தமிழ்ச் சங்கத்தின் அக்டோபர் மாத நிகழ்ச்சி 20-10-2023 அன்று சிறப்பாக நடைபெற்றது என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்

நடைபெற்ற இந்தக் குடும்ப கிரிக்கெட் நிகழ்ச்சி Family Fun Cricket 2.0 ல் ஆர்வத்துடன் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து உற்சாகத்துடன் கலந்து கொண்டு நிகழ்ச்சிகளை மிகச் சிறப்பாக அமைத்து கொடுத்த நமது சங்க உறுப்பினர்கள், அவர்தம் குடும்பத்தினர்களுக்கும் எங்களின் உளமார்ந்த நன்றிகள்…

இதில் கலந்து கொண்டு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் தங்களது சிறப்பான பங்களிப்பை அளித்தார்கள்.

இடம் - Scientific College of Design Stadium, Seeb தேதி : 20/ அக்டோபர்/2023, வெள்ளிக்கிழமை
நேரம் : மாலை 4:00 மணி




நிகழ்ச்சி : சுதந்திர தின சிறப்பு பேச்சுப்போட்டி - என் தேசமே என் நேசமே

நமது மஸ்கட் தமிழ்ச்சங்கம் பெருமையுடன் வழங்கும் பேச்சாற்றால் திறன் போட்டி கடந்த செப்டம்பர் மாதம் 1 ஆம் நாள் சிறப்பாக நடைபெற்றது என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்.

இந்த நிகழ்ச்சியில் நமது மஸ்கட் தமிழ்ச்சங்க உறுப்பினர்கள் மற்றும் குடும்பத்தினர்கள் தங்கள் பேச்சுத்திறனை வளர்க்கும் விதமாகவும், தமிழின் சிறப்புக்களை, சுதந்திரத்தின் பெருமைகளை பறைச்சாற்றும் விதமாகவும், சுதந்திரம் பெற்ற இந்த பொன் நாளை பற்றியும் அதன் சிறப்பினை பற்றியும் இந்த சுதந்திரம் கிடைக்க உறுதுணையாக இருந்த போராட்டத் தலைவர்கள், தியாகிகள் பற்றியும் மிகசிறப்பான களத்தினை அவர்தம் தலைப்புகளில் நம் தமிழ்ச் சங்க உறுப்பினர்கள் பேச்சுக்களை வழங்கினார்கள்.

இடம் - ISC Multi-purpose Hall, Darsait தேதி : 01/ செப்டம்பர்/2023, வெள்ளிக்கிழமை
நேரம் : மாலை 7:00 மணி




நிகழ்ச்சி : திருக்குறளும் நானும்

கோடை விடுமுறையை பயனுள்ளதாக்க நம் மஸ்கட் தமிழ்ச் சங்க வரலாற்றில் ஒரு முதல் முயற்சியால்…

நமது மஸ்கட் தமிழ்ச் சங்கக் குழந்தைகள் “திருக்குறளும் நானும்“ என்ற தலைப்பின் கீழ் தமிழ் வாசிக்கவும் எழுதவும் தெரிந்த குழந்தைகள் அன்றாடம் திருக்குறளை ஆர்வமுடன் பொருளோடு எழுதி கோப்புகள் முறையில் அதிக அளவில் ஜூன் மற்றும் ஜூலை -2023 மாதங்களில் பதிவிட்டு வந்தார்கள்.

பங்கு பெற்ற அனைத்து குழந்தைகளுக்கும் திருவள்ளுவர் உருவ சிலை, விருதுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கபட்டது.

நாள் : ஜூன் மற்றும் ஜூலை மாதங்கள் - 2023




நிகழ்ச்சி : உள் அரங்கு விளையாட்டுப் போட்டிகள்

நமது மஸ்கட் தமிழ்ச்சங்கம் வழங்கிய உள்ளரங்க விளையாட்டுப் போட்டியில் 19-மே-2023 அன்று நமது உறுப்பினர்கள் தங்களது குடும்பத்துடன் பெருந்திரளாய் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

கீழ்கண்ட விளையாட்டுகள் விமரிசையாக நடை பெற்றது .

  1. பல்லாங்குழி
  2. நொண்டியாட்டம்
  3. சதுரங்கம் (Chess)
  4. கரம் பலகை (Carom)
  5. பூப்பந்தாட்டம் (Badminton)
  6. ரூபிக்கின் கனசதுரம் (Rubik's cube)
  7. மேசைப்பந்தாட்டம் (Table Tennis)

இந்த விளையாட்டு போட்டியில் கலந்து கொண்ட உறுப்பினர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தவும், மேம்படுத்தவும் நல்ல ஒரு வாய்ப்பாக அமைந்தது.

நிகழ்ச்சியின் இறுதியில் போட்டியில் கலந்துகொண்டு சிறப்பித்த அனைவருக்கும் விருதுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கபட்டது.

இடம் - ISC Premises, Darsait

தேதி : 19-மே-2023, வெள்ளிக்கிழமை
நேரம் : காலை 9:00 மணி முதல்




நிகழ்ச்சி : கலக்கல் குடும்பம்

நமது மஸ்கட் தமிழ்ச் சங்கம் ஒரு முழுமையான குடும்ப நிகழ்ச்சி ஒன்றை மே-2023 ல் நடத்தியது என்பதை அறிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.

இந்த "கலக்கல் குடும்பம்" நிகழ்ச்சிக்காக பல்வேறு குடும்ப அணிகள் அற்புதமான தங்களின் திறமைகளை தயார் செய்து மேடையில் மிக அழகாக நடித்து அரங்கத்தை அலங்கரித்தனர்.

மேலும், நமது சிறப்பு விருந்தினரான இயக்குனர் திரு.சீனு ராமசாமி அவர்கள் தமிழ் சங்க உறுப்பினர்கள் அனைவரையும் சந்தித்து பிரத்யேகமாக ஒரு சிறந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியை நடத்தி கொடுத்தார்.

இந்த நிகழ்ச்சி நமது தமிழ்ச் சங்கக்குடும்பங்கள் அனைவருக்கும் இன்பம் நிறைந்த இனிய பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக இருந்தது என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

இடம் - ISC Multi-purpose Hall, Darsait தேதி : 05-மே-2023, வெள்ளிக்கிழமை
நேரம் : மாலை 5:30 மணி

© muscattamilsangam, All Right Reserved.